இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்வடைந்துள்ளது.
இந்தோனேஷியாவின் மேற்கு மாகாணமான சுமாத்ராவில் கடந்த வெள்ளிக்கிழமை (25) 6.1ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்வடைந்துள்ளது.இந் நிலையில் பசாமான் மாவட்டம்,மலம்பா கிராமத்தில் நிலச்சரிவில் காணாமல் போனவர்களைத் தேடும் பணிகள் மீண்டும் ஆரம்பித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.