“ஒரு நாடு, ஒரே சட்டம்” : பதவிக்காலத்தை நீடித்தார் ஜனாதிபதி!

Date:

“ஒரு நாடு, ஒரே சட்டம்” தொடர்பான ஜனாதிபதி செயலணியின் பதவிக் காலத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

நேற்று (திங்கட்கிழமை) முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதியினால் இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

நாட்டின் அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கிய பொதுமக்கள் மற்றும் நிபுணர்கள் குழுவின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்ளவே செயலணியின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ தொடர்பான ஜனாதிபதி செயலணி நிறுவப்பட்டு அதற்கு தலைவராக ஞானசார தேரரை ஜனாதிபதி நியமித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

தரம் 6 இற்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான புதிய சுற்றுநிருபம் வெளியீடு!

5ம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவர்களைத் தரம்...

கதிர்காம பகுதியில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல: சமூக ஊடகங்களில் பரவி வரும் கருத்துக்கள் தவறானதாகும் – கோட்டாபய

கதிர்காமத்தில் மாணிக்க கங்கைக்கு அருகில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல...

இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிய விதத்தை வெளிப்படுத்தி பொலிஸார்

கணேமுல்ல சஞ்சீவ கொலை குற்றச்சாட்டில் நேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி...