இலங்கை முழுவதும் நாளையதினம் (புதன்கிழமை) 7 மணி 30 நிமிடங்கள் மின்சாரத்தை துண்டிப்பதற்கு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி காலை ஐந்து மணி நேரம் மாலை 2 மணி 30 நிமிடங்களுக்கு என மின்சாரம் தடைபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் காணப்படும் டொலர் தட்டுப்பாடு மற்றும் நீர் மின் உற்பத்தி நிலையங்கள் செயற்படாமை காரணமாக மின்சாரம் தடைப்படுகின்றது.
அதன்படி, E, T, U, V, W ஆகிய வலயங்களில் காலை 8.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை 5 மணி நேரமும் F, P, Q, R, S வலயங்களுக்கும் மதியம் 1.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை 5 மணி நேரமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.
மேலும் E, T, U, V, W ஆகிய வலயங்களில் மாலை 6.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை இரண்டரை மணி நேரமும் F, P, Q, R, S ஆகிய பகுதிகளில் இரண்டரை மணி நேரமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.