இன்றைய தினம் (மார்ச் 08) மின்வெட்டு நேற்றுபோலவே மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு தாம் அங்கீகாரம் வழங்கியுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி, அட்டவணையில் உள்ள P, Q, R, S, T, U, V மற்றும் W ஆகிய குழுக்களின் கீழ் உள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 2 மணி நேரமும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை ஒரு மணி நேரமும் மின் தடை ஏற்படும்.
E மற்றும் F குழுக்களின் கீழ் உள்ள பகுதிகளில், நாளை காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 5 மணி நேரமும், மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை இரண்டரை மணி நேரமும் மின்வெட்டு ஏற்படும்.
நிலவும் மின்வெட்டு காரணமாக மின்சார நுகர்வோருக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துவதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.