பாலமுனையில் முஸ்லிமொருவரின் காணியில் அத்துமீறி பௌத்த விகாரை அமைக்க முயற்சி: மக்கள் எதிர்ப்பால் பதற்ற நிலைமை

Date:

அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட பாலமுனை முள்ளிமலை பிரதேசத்தில் முஸ்லிமொருவருக்கு சொந்தமான காணியொன்றில் விகாரையொன்றை அமைக்க முயற்சி செய்த தேரர்கள் குழுவொன்றுக்கு எதிராக இடம்பெற்ற எதிர்ப்பு நிலைமையால் பதற்ற நிலை உருவாகியது.

தனியார் காணியில் புராதன சின்னங்கள் உள்ள காணியென பொய்யான பரப்புரையை முன்வைத்து புத்தர் சிலையொன்றை நிறுவ பௌத்த பிக்குகளும், சிங்கள இளைஞர்கள் சிலருக்கு எதிராக அப்பிரதேச மக்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

கடந்த சில நாட்களாக அங்கு வருகைத் தந்த சிங்கள இளைஞர்கள் சிலர் சிலை நிறுவும் ஏற்பாடுகளை செய்து வந்ததாகவும் இன்று காணி பூஜை செய்வதற்கான ஏற்பாடுகளை செய்தபோதே இந்த முரண்பாட்டு நிலை தோன்றியுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

குறித்த பகுதிக்கு நேரடியாக வருகைத் தந்த முன்னாள் கிழக்கு மாகாண சபை அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை, கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஏ.எல். தவம், அட்டாளைசேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.ஏ. அன்ஸில், அட்டாளைசேனை பிரதேச சபை தவிசாளர் ஏ. அமானுல்லா, அட்டாளைசேனை பிரதேச சபை உறுப்பினர்கள், பிரதேச மக்கள் பலரும் வெளியிட்ட எதிர்ப்பை அடுத்து அக்கரைப்பற்று பொலிஸார் மற்றும் பாதுகாப்பு படையினரின் தலையீடுகளுடன் அரசாங்க அதிபரூடாக பிரச்சினையை தீர்க்க முடிவு செய்யப்பட்டதுடன் அங்கிருந்து எல்லோரும் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் விகாரை அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் இடம் தனியாருக்குச் சொந்தமானது என்பது தொடர்பான ஆவணங்களை அங்கு வந்திருந்த பௌத்த பிக்குகளிடம் காட்டி, குறித்த இடத்தில் பௌத்த விகாரை அமைக்க முடியாது என்பதை அங்கு வந்திருந்த முக்கியஸ்தர்களும் பொதுமக்களும் வலியுறுத்தி, தமது கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தமையை அடுத்து, அங்கு வந்த பௌத்த பிக்குகளும் அவர்களின் குழுவினரும் அங்கிருந்து வெளியேறிச் சென்றனர்.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...