பழங்களுக்கான விசேட பண்ட வரி அதிகரிப்பு: ஆடை விலைகள் 50 வீதத்தால் அதிகரிப்பு!

Date:

இறக்குமதி செய்யப்படும் பழங்கள் உள்ளடங்களாக ஒன்பது பொருட்களுக்கான விசேட பண்ட வரி விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், இந்த வரி அதிகரிப்பு அடுத்த 6 மாதங்களுக்கு அமுலில் இருக்கும் என நிதியமைச்சு அறிவித்துள்ளதுடன் விசேட பண்ட வரிச்சட்டத்தின் கீழ் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்த வரி அதிகரிப்பை மேற்கொண்டுள்ளார்.

வரி அதிகரிப்பினால் இறக்குமதி செய்யப்படும் தயிர், அப்பிள், திராட்சை, சீஸ் ஆகியவற்றின் விலைகள் அதிகரிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஒரு கிலோகிராம் ஆப்பிள் மீதான வரி 200 ரூபாவினாலும், ஒரு கிலோகிராம் திராட்சை மீதான வரி 100 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளது.

அத்துடன், ஒரு கிலோகிராம் தோடம்பழத்திற்கான வரி 75 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் மாதுளை கிலோகிராம் ஒன்றிற்கான விசேட பண்ட வரி 100 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஒரு கிலோ தயிருக்கான வரி 200 ரூபாவினாலும், பாலாடைக்கட்டிக்கான (சீஸ்) விசேட பண்ட வரி ஒரு கிலோவுக்கு 400 ரூபாவாகவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை ஆடைகளின் விலைகளால் 50 வீதத்தால் அதிகரிக்கப்படலாம் என்று புடவைக்கைதொழிலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலைமையால் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ள காரணத்தினால் தற்போது சந்தையில் புடவைகளின் விலைகள் 35 வீதத்தால் அதிகரித்துள்ளதாக அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதனால் ஆடை உற்பத்தித்துறை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் தைத்து முடிக்கப்பட்ட ஆடைகளின் விலைகள் அதிகரிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

Popular

More like this
Related

டிரம்பின் அமைதி திட்டத்தின்படி போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றது ஹமாஸ்!

ஏறத்தாழ கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வரும் இஸ்ரேல்-ஹமாஸ் போர் தற்போது...

போதைப்பொருள் தொடர்பான தகவல்களை வழங்க புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்!

நாட்டின் பல பகுதிகளிலும் ஹெரோயின், ஐஸ், கொக்கேயின் மற்றும் கஞ்சா உள்ளிட்ட...

இலங்கையில் அவசர எரிசக்தி துறை சீர்திருத்தங்களை வலியுறுத்தும் உலக வங்கி!

பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளை விட இலங்கை தொடர்ந்து கணிசமாக அதிக...

சிறுவர்களை ஆபாச செயற்பாடுகளுக்குள் தள்ளும் டிக்டொக் : ஆய்வில் தகவல் !

டிக்டொக் (TikTok) செயலியானது அதன் பரிந்துரைக்கப்பட்ட தேடல் சொற்கள் மூலம் இளம்...