பரீட்சைகள் திட்டமிட்டபடி நடைபெறும்: மேல் மாகாண கல்வித் திணைக்களம்!

Date:

அச்சிடுவதற்கு கடதாசி தாள்கள் பற்றாக்குறையால் பிற்போடப்பட்ட மேல்மாகாண அரச பாடசாலைகளின் தரம் 09, 10 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கான தவனை பரீட்சைகள் முன்னர் திட்டமிட்டபடி நடைபெறும் என மேல் மாகாண கல்வித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், வினாத்தாள்களை அச்சிடுவதற்கு தேவையான வினாத்தாள்களை பெற்றுக்கொள்ள முடிந்துள்ளதாகவும் மாகாண கல்வித்திணைக்களம் இதன்போது, சுட்டிக்காட்டியுள்ளது.

இதன்படி, மேல்மாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளிலும் தரம் 09, 10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தவனைப் பரீட்சைகள் முன்னர் திட்டமிட்டபடி மார்ச் 29 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், பரீட்சைகள் முன்னர் வெளியிடப்பட்ட அதே கால அட்டவணையின் பிரகாரம் நடைபெறும்.

இதற்கு மேலதிகமாக தரம் 06, 07 மற்றும் 08 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தவனைப் பரீட்சைகள் இன்று (21) முதல் வழமைபட போன்று இடம்பெறும் என மாகாண கல்வித்திணைக்களம் தெரிவித்துள்ளது.

தேவையான காகித தாள்கள் மற்றும் மை இறக்குமதி செய்ய அச்சுப் பொறிகள் அந்நியச் செலாவணியைப் பெற முடியாததால், கடுமையான காகிதத் தட்டுப்பாடு ஏற்பட்டது.
இதேவேளை எதிர்வரும் வாரம் ஆரம்பமாகவிருந்த பருவத் தேர்வுகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டதாக கல்வி அதிகாரிகள் கடந்த வாரம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பாடசாலை நேரத்தை நீடிக்காதிருக்க கல்வி அமைச்சு தீர்மானம்!

2026 ஆம் ஆண்டில் பாடசாலை நேரத்தை நீடிக்காதிருக்க கல்வி அமைச்சினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாட்டினுள்...

கிழக்கு, வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மழை நிலைமை எதிர்வரும் நாட்களில் அதிகரிக்கும்

இலங்கையின் கிழக்கில் உருவாகியுள்ள குறைந்த அளவிலான வளிமண்டலக் குழப்பம் காரணமாக, கிழக்கு,...

பங்களாதேஷ் தேசியவாதக் கட்சியின் பிரதித் தலைவர் தாரிக் ரஹ்மான்- அமைச்சர் விஜித ஹேரத் இடையில் சந்திப்பு.

பங்களாதேஷ் தேசியவாதக் கட்சியின் பிரதி தலைவரும் முன்னாள் பிரதமர் கலேதா ஜியாவின்...