‘எதிர்காலத்தில் உணவு நெருக்கடி ஏற்படாமல் தடுக்க சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்’: விவசாயிகள்

Date:

2021ஆம் ஆண்டு இரசாயன உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு அரசு தடை விதித்ததைத் தொடர்ந்து, விளைச்சல் குறைந்து, பயிரின் தரம் குறைவது குறித்து விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இந்த செயற்பாட்டினால் விவசாயம் சார்ந்த வேலை வாய்ப்புகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

விவசாயிகள் தமது நகைகள் மற்றும் சொத்துக்களை அடகு வைத்து பயிர்ச்செய்கைக்காக பணம் திரட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

பயிர்ச்செய்கை எதிர்பார்த்தளவுக்கு இலாபகரமானதாக அமையவில்லை எனவும் ஹிங்குராங்கொட பிரதேச விவசாயி கேஷர விதானகே என்பவர் விசனம் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் கட்டுப்பாடுகள் காரணமாக விளைச்சல் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதால் பல விவசாயிகள் விவசாயத்தை கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தொழிற்சங்க தலைவர் சம்பத் அபேசுந்தர தெரிவித்தார்.

இதனால் குறைந்த வருமானம் பெறும் விவசாயிகள் இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்த ஆசைப்படுகின்றனர், இதனால் அவர்கள் மேலும் பாதிக்கப்படுகின்றனர்.

விவசாயத்தை பாதுகாக்கவும். எதிர்காலத்தில் உணவு நெருக்கடி ஏற்படாமல் தடுக்கவும். சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், ‘எங்களுக்கு மிகவும் மோசமான அறுவடை இருந்தது. இனி விவசாயம் செய்வதா அல்லது விவசாயத்தை கைவிடுவதா என்பதை தெரிவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கு காரணம் விளைச்சல் குறைவடைந்ததாகும் சுமார் 180 ஏக்கரில் விவசாயம் செய்கிறோம். இந்தப் பயிரை அறுவடை செய்வதற்குத் தேவையான பணத்தைக் தேடிக்கொள்வதற்கு சிக்கலாக உள்ளது’ என தொழிற்சங்கத் தலைவர் சம்பத் அபேசுந்தர தெரிவித்தார்.

‘நாங்கள் சுமார் 200 ஏக்கரில் விவசாயம் செய்கிறோம் உங்களுக்கு இது போன்ற தரத்தில் குறைந்த நெல் கிடைத்தது தங்க நகைகள் மற்றும் உழவு இயந்திரங்களை அடகு வைத்தே இந்த அறுவடைக்கு தேவையான பணத்தை திரட்டினோம்’.

கரிம உரம் மற்றும் நானோ நைட்ரஜனைப் பயன்படுத்துவதன் மூலம் இத்தகைய அறுவடை பெறப்பட்டது. என விவசாயி ஒருவர் கருத்து தெரிவித்தார்.

இந்த நாட்டில் எந்த பகுதியாக இருந்தாலும் விவாசாய துறை பாரிய சிக்கல் நிலையில் உள்ளது. இந்த நெருக்கடியால் தேயிலை, தென்னை, ரப்பர் உள்ளிட்ட அனைத்து விவசாய பயிர்ச் செய்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கு அதிகாரிகளே பொறுப்பேற்க வேண்டும்.

இரசாயன உரத்தைப்பயன் படுத்துங்கள் அதனால் பாதிப்பு ஏற்பட்டால் அதற்கான இழப்பிட்டை வழங்குவதாக உறுதி அளிக்கப்பட்டது. அந்த வாக்குறுதிகளை இப்போதே நிறைவேற்றுங்கள்’ என தொழிற்சங்க உறுப்பினர் ருவான் அபேநாயக்க தெரிவித்தார்.

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...