கண்டி, கட்டுகஸ்தோட்டை மெனிக்கும்புர பிரதேசத்தில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.
இந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் தந்தை, மகள் மற்றும் மருமகன் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் தாய் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் நான்கு வீடுகளும் தீயில் சேதமடைந்துள்ளதுடன் தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படாத நிலையில், மூன்று பேர் உயிரிழந்ததற்கான காரணத்தை அதிகாரிகள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.