அனைத்து பொது போக்குவரத்து சேவைகளும் வழமைக்கு திரும்பின!

Date:

நாட்டில் சகல பொது போக்குவரத்து சேவைகளும் வழமைக்கு திரும்பியது.

கடந்த சனிக்கிழமை அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டதையடுத்து புகையிரதங்கள், இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்துகள் உட்பட அனைத்து போக்குவரத்து சேவைகளும் இன்று காலை 6.00 மணி முதல் தமது சேவைகளை ஆரம்பித்தன.

அதன்படி, அனைத்து அலுவலக புகையிரதங்களும் வழமை போன்று மீண்டும் பாதையில் பயணித்துள்ளதாகவும், எனினும் நீண்ட தூர புகையிரதங்கள் ஒரு மணித்தியாலத்தின் பின்னர் தாமதமாக இயக்கப்பட்டதாகவும் ரயில்வே பிரதி பொது முகாமையாளர் காமினி செனவிரத்ன தெரிவித்தார்.

அனைத்து டிப்போக்களுக்கும் சொந்தமான பேருந்துகள் திட்டமிட்ட நேர அட்டவணையின்படி மீண்டும் வீதிக்கு வந்துள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் தெரிவித்தார்.

இதேவேளை, தற்போதுள்ள 15 வீதமான பேருந்துகள் இன்று முதல் இயங்கத் தொடங்கியுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

நேற்று டீசல் விநியோகம் செய்யப்பட்டதையடுத்து – நியமிக்கப்பட்ட ளுடுவுடீ டிப்போக்களில் இருந்து நீண்ட வரிசையில் காத்திருந்து பேருந்துகள் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளன.

Popular

More like this
Related

சுங்க வருவாய் ரூ. 2 டிரில்லியனைக் கடந்தது!

இலங்கை சுங்கத் திணைக்களம், தனது ஆண்டு வருவாய் செயல்திறனில் ஒரு குறிப்பிடத்தக்க...

கஹட்டோவிட்டவில் MEPS & MLSC நடத்தும் முப்பெரும் விழா 2026.

கஹட்டோவிட்ட Muslim Ladies Study Circle  மற்றும் MEPS ஆகியவற்றின் ஏற்பாட்டில்...

நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான விளக்கமறியல் நீடிப்பு!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை எதிர்வரும் செப்டம்பர் 23 ஆம் திகதி...

சேதமடைந்த உபகரணங்களுக்காக ரூமேஷ் தரங்கவுக்கு துருக்கிய ஏர்லைன்ஸ் இழப்பீடு!

நாடு திரும்பும் வழியில் தனது விளையாட்டு உபகரணங்களுக்கு ஏற்பட்ட சேதத்திற்காக, இலங்கை...