நம் அழகிய நாடு சிதைந்து கிடப்பதைப் பார்க்கும் போது மிகவும் வருத்தமாக இருக்கிறது, ஒரு ஜனநாயக நாட்டில், திறமையற்ற, விசுவாசமற்ற, பேராசை பிடித்த அரசியல்வாதிகளை தொடர்ச்சியாகத் தேர்ந்தெடுப்பதற்காக நம்மை நாமே குற்றம் சாட்டிக்கொள்ள வேண்டும்.
குடிமக்கள் இந்த நாட்டை நேசிக்கிறார்கள், அரசியல் தலைவர்கள் என்று அழைக்கப்படுபவர்களை விட அவர்கள் தான் தேசபக்தி கொண்டவர்கள் என்று நான் நம்புகின்றேன்.
இந்த நாட்டின் அனைத்து குடிமக்களும் அனைத்து வேறுபாடுகளையும் ஒதுக்கிவிட்டு, அனைத்து ஊழல் அரசியல்வாதிகளுக்கும் எதிராக ஒரே தேசமாக நிற்க வேண்டும் என்று நான் அழைப்பு விடுக்கின்றேன் என அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமாவின் பொதுச்செயலாளர் அஷ்ஷெய்க் அர்க்கம் நூராமித் தனது முகப்புத்தகத் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.