மருந்துகளுக்கு பாரிய தட்டுபாடு : ‘எதிர்காலத்தில் பாரிய சிக்கல் நிலையை தோற்றுவிக்கும்’

Date:

நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் வைத்தியசாலைகளில் மருந்துகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அரசாங்கத்தினால் அத்தியவசிய மருந்துகளின் விலை 29 சதவீதத்தினால் அதிகரித்ததை அடுத்து மருந்து பொருட்களுக்கு தட்டுபாடு ஏற்பட்டுள்ளது.

நாட்டின் வைத்தியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் அரசாங்கத்தின் குறித்த கொள்கைகளுக்கு எதிராக வீதிகளில் இறங்கி போராடங்களை மேற்கொண்டுவருகின்றனர்.

நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளில் மிக அத்தியவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கு அதிக கேள்வி ஏற்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இது தொடர்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு மற்றும் ஊடகக் குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரத்ணசிங்கம் தெரிவிக்கையில்,

‘எரிபொருள், பெற்றோல், எரிவாயு மற்றும் அத்தியாவசிய மருந்துகளுக்காக மக்கள் வரிசையில் நிற்கின்றனர் நாடு கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதோடு, இந்த நெருக்கடியானது எதிர்காலத்தில் பாரிய சிக்கல் நிலையை தோற்றுவிக்கும் என வைத்தியர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அத்தியவசிய சிகிச்சைகளுக்கான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கு தட்டுபாடு நிலவுகின்றது. குறிப்பாக உயிரைகாக்கும் 5 அத்தியவசிய மருந்துகள் உட்பட 237 அத்தியவசிய மருந்துகளுக்கு பாரிய தட்டுபாடு ஏற்பட்டுள்ளது.

மருத்துவ விநியோகப் பிரிவினருடன் நடத்திய கலந்துரையாடலின் போது, எதிர்வரும் சில வாரங்களுக்கு போதுமான சில மருந்துகள் மட்டுமே கையிருப்பில் உள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையானது சுகாதாரத் துறை கட்டமைப்பிற்கு பாரிய சவாலாகும்’

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வைத்தியர் ஹன்சமல் வீரசூரிய தெரிவிக்கையில்,

‘நாட்டில் மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை என அரசாங்கம் உத்தியோகபூர்வ ஊடக அறிக்கை ஒன்றை அண்மையில் வெளியிட்டிருந்தது. குறித்த ஊடக அறிக்கை்கு அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கமான நாம் அதிருப்தியை வெளிப்படுத்தினோம்.

அரசாங்கத்தினால் இவ்வாறான பிழையான மற்றும் தொலைநோக்கு பார்வையற்ற அறிக்கைகளை ஊடகங்களுக்கு வெளியிடுவதன் மூலம் நாட்டு மக்கள் முற்றாக ஏமாற்றப்பட்டுள்ளனர்.

எனவே நாட்டு மக்களை ஏமாற்றிஇ அவர்களுக்குப் பாரிய சிக்கலை தோற்றுவிக்கும் இடத்திற்கு இந்தப் பிரச்சினையை கொண்டு செல்ல நாங்கள் தயாராக இல்லை.

மக்களுக்கு தேவையான மருந்து பொருட்களை பெற்றுக்கொடுப்பதற்கும் நாட்டின் இலவச சுகாதார சேவையை உரிய வகையில் வழங்க தேவையான அனைத்து நடவடிக்கைகளை மேற்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...