இடைக்கால அரசாங்கமொன்றை அமைப்பதற்கும், பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வுகாண உடனடி நடவடிக்கை எடுப்பதற்கும் சம்மதம் தெரிவித்து மகாநாயக்கர்களுக்கு ஜனாதிபதி கடிதம் அனுப்பியுள்ளதாக அஸ்கிரிய மகா நிகாயத்தின் பதிவாளர் மெதகம தம்மாநந்த தேரர் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தின் அங்கீகாரத்துடன் புதிய அரசியலமைப்பை நாட்டுக்கு முன்வைப்பதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பான குழுவின் அறிக்கையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பெற்றுக்கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அறிக்கையின் உள்ளடக்கங்களை அரசாங்கம் ஆழமாகப் பரிசீலித்து மேற்கொண்டு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளைத் தீர்மானிப்பதாக ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் தெரிவித்தார்.
“நிலையான அர்ப்பணிப்பு மற்றும் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கும் மதிப்புமிக்க பணிக்காக குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி தனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவிக்க விரும்புகிறார்” என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.