அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் முன்னெடுக்கும் போராட்டத்திற்கு ஆதரவாக அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க ரயில்வே தொழிற்சங்க கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.
அதற்கமைய எதிர்வரும் 27ஆம் திகதி நள்ளிரவு முதல் 28ஆம் திகதி நள்ளிரவு வரை இந்த வேலை நிறுத்தத்தை முன்னெடுக்கவுள்ளது.
ரயில்வேயின் முக்கிய தொழிற்சங்கங்கள் உட்பட 30க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளன.