மட்டக்களப்பு கேணிநகர் மதீனா வித்தியாலய புதிய கட்டடத் தொகுதிக்கு அடிக்கல் நடும் நிகழ்வு!

Date:

மட்டக்களப்பு மத்திய கல்வி வலயத்திற்குட்பட்ட ஓட்டமாவடி கோட்டக் கல்வி அலுவலகத்துக்குட்பட்ட மீள்குடியேற்ற கிராமமான கேணிநகர் மதீனா வித்தியாலயத்தில் ஐ.எஸ்.ஆர்.சீ. சிறிலங்கா அமைப்பினால் நிர்மாணிக்கப்படவுள்ள புதிய கட்டடத் தொகுதிக்கு அடிக்கல் நடும் நிகழ்வு இடம்பெற்றது.
பாடசாலையின் அதிபர் ஏ.மீரா முகைதீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மத்திய கல்வி வலய பணிப்பாளர் டாக்டர் எஸ்.எம்.எம்.எஸ் உமர் மௌலானா, ஐ.எஸ்.ஆர்.சீ. சிறிலங்கா அமைப்பின் திட்ட இணைப்பாளர் ஏ.எல்.ஜூனைட் நளீமி, பிரதிக் கல்விப் பணிப்பாளரும், ஓட்டமாவடி கோட்டக் கல்விப் பணிப்பாளருமான வீ.ரீ.அஜ்மீர், பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஜே.தாஜூன் நிஸா, உதவிக் கல்விப் பணிப்பாளர்களான எம்.யூ.எம்.இஸ்மாயில், எம்.ஏ.ஜாபீர் கரீம், ஆசிரிய ஆலோசகர்களான ஏ.எல்.சலாம், எம்.பீ.எம்.சித்தீக் மற்றும் ஓட்டமாவடி வர்த்தக சங்கத் தலைவரும் சமுகசேவையாளருமான எம்.ஏ.சீ.எம்.நியாஸ், பள்ளிவாயல் நிர்வாகத்தினர், கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
ஐ.எஸ்.ஆர்.சீ. சிறிலங்கா அமைப்பின் நிதியுதவியில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள குறித்த கட்டடத்தில் ஆசிரியர்களுக்கான பல்தேவை தொகுதி, கலாச்சார மண்டபம், மாணவர்களுக்கான வகுப்பறை தொகுதி ஆகியவை அமைவுள்ளன என்று பாடசாலையின் அதிபர் ஏ.மீரா முகைதீன் தெரிவித்தார்.
பாடசாலைக்கு அவசியத் தேவையாக காணப்பட்ட இவ் கட்டடத் தொகுதி அமைய முயற்சிகளை மேற்கொண்ட ஏ.எல்.ஜுனைத் நளீமி மற்றும் கட்டடம் அமைப்பதற்கு அனுமதி வழங்கிய கல்வி அதிகாரிகளுக்கும் பாடசாலை அதிபர் நன்றிகளை தெரிவித்தார்.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்ட முஸ்லிம் மீடியா போரம் உதயம்: தலைவராக கலாபூஷணம் நிலாம்!

கம்பஹா மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (17)...

2026 முதல் 6 மாதங்களுக்குள் மாகாண சபைத் தேர்தலை நடத்த திட்டம்!

மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்ட பின்னர் அரசியலமைப்புத் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று...

வடக்கு-கிழக்கில் இன்று ஹர்த்தால்!

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று திங்கட்கிழமை (18) காலை...

பாடசாலை மூன்றாம் தவணை இன்று ஆரம்பம்!

அரச அங்கீகாரம் பெற்ற தமிழ், சிங்கள பாடசாலைகளின் மூன்றாம் தவணைக்கான கல்வி...