இடைக்கால அரசாங்கத்தினை அமைப்பது தொடர்பான கலந்துரையாடல் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஜனாதிபதி மாளிகையில் இன்று காலை 10.30 மணிக்கு இந்தக் கலந்துரையாடல் ஆரம்பமாகவுள்ளது.
கலந்துரையாடலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, 10 கட்சிகள் அடங்கிய குழு மற்றும் அரசாங்கத்தில் இருந்து வெளியேறி சுயேட்;சையாக செயற்பட்டு வரும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மற்றும் அவரது அமைச்சரவை இராஜினாமா செய்த பின்னர் அமைக்கப்படும் காபந்து அரசாங்கம் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளது.
அத்துடன், இடைக்கால அரசாங்கத்தின் கட்டமைப்பு, பதவிக்காலம் மற்றும் பொறுப்புகள் குறித்து விவாதிக்க ஜனாதிபதி தயாராகி வருவதாகவும் கூறப்படுகின்றது.
முன்னதாக கட்சிகளின் தலைவர்களுக்கு ஜனாதிபதி எழுதியுள்ள கடிதத்தில், நாடாளுமன்றத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் சகல கட்சிகளையும் இணைத்து இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.