எரிவாயு விலை அதிகரிப்பின் அழுத்தத்தை மக்கள் தாங்க வேண்டுமானால் அரச நிறுவனமான லிட்ரோவின் உயர்மட்ட அதிகாரிகளும் தியாகம் செய்ய வேண்டியிருக்கும் என அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல பண்டார தெரிவித்துள்ளார்.
லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் 3 மில்லியன் ரூபா பாரிய சம்பளம் பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளதாகவும், அவ்வாறு சம்பளம் பெறுவதில் நியாயம் இல்லை எனவும் அசேல தெரிவித்தார்.
இந்த உயர் சம்பளத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் தான் லிட்ரோ நிறுவனத்திற்கு அசேல பண்டார மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை கடந்த (26) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 4,860 ரூபாவாக அதிகரிக்கப்பட்டது.
5 கிலோகிராம் எடையுடைய எரிவாயு சிலிண்டரின் விலை 1945 ரூபாவாக அமைந்துள்ளதுடன் 2.3 கிலோகிராம் எடையுடைய லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 910 ரூபாவாக உள்ளது.
கடந்த 22 ஆம் திகதி நள்ளிரவு முதல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலையை 5,175 ரூபா வரை அதிகரிப்பதற்கு லிட்ரோ நிறுவனம் தீர்மானித்தாலும், அரசாங்கத்தின் அறிவிப்பிற்கு அமைய அந்த தீர்மானம் ஒத்திவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.