எரிபொருள் போக்குவரத்து நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள தாங்கிகளின் உரிமையாளர்கள் இன்று (30) இரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
தனியார் எரிபொருள் கோரும் 60 வீத கட்டண அதிகரிப்பு தொடர்பில் அமைச்சருடன் இன்று (30) பிற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடல் தோல்வியடைந்ததன் காரணமாக இன்று நள்ளிரவு முதல் இந்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கத்தின் இணைச் செயலாளர் சாந்த சில்வா தெரிவித்துள்ளார்.
எரிபொருள் மற்றும் உதிரிபாகங்கள் மற்றும் காப்புறுதி கட்டணங்கள் 150 வீத அதிகரிப்பினால் எரிபொருள் விலையை 60 வீதமாக அதிகரிக்குமாறு கோரியுள்ளார்.
அதன்படி இன்று நள்ளிரவு முதல் தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு தமது தொழிற்சங்கம் தீர்மானித்துள்ளது.
இலங்கை முழுவதும் 600 தனியார் தாங்கி எண்ணெய் விநியோகத்தில் ஈடுபட்டு வருவதாகவும் வேலைநிறுத்தம் காரணமாக எரிபொருள் ஏற்றிச் செல்வதற்கு தாங்கிகள் பயன்படுத்தப்பட மாட்டாது என அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை வேலைநிறுத்தம் தொடரும் என அவர் மேலும் தெரிவித்தார்.
தனியார் தாங்கி உரிமையாளர்களின் வேலைநிறுத்தம் நாட்டில் மீண்டும் எரிபொருள் நெருக்கடிக்கு வழிவகுக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.