‘அனுரகுமாரவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’ :பிரதமர் அலுவலகம்

Date:

ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவுக்கு எதிராக எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

யோஷித ராஜபக்ஷவை பொய்யான தகவல்களால் அவமதித்த குற்றத்திற்காக அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பணிப்புரை விடுத்துள்ளதாக அந்த அலுவலகம் தெரிவித்துள்ளது.

கடந்த 3ஆம் திகதி (மே3) ஸ்ரீலங்கா அறக்கட்டளை நிறுவனத்தில் ஜே.வி.பி நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பிட்ட சில உறுதிப்பத்திர எண்கள் மற்றும் காணிகளின் பெயர்களை முன்வைத்து யோஷித ராஜபக்ஷவை அவமதிக்கும் வகையில் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்த கருத்துக்கள் உண்மைக்கு புறம்பானது எனவும் பிரதமர் அலுவலகம் குறித்த அறிக்கையில், குறிப்பிடப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க நேற்று (3) இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பல்வேறு ஊழல் வழக்குகள் தொடர்பான 100 க்கும் மேற்பட்ட ஆவணங்களை சமர்ப்பித்திருந்தார்.

இதன்போது, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷவுக்கு சொந்தமான சுமார் 31 சொத்துக்களின் பட்டியலை அநுர குமார திஸாநாயக்க வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை

ஊவா, சப்ரகமுவ மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை, நுவரெலியா மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பிற்பகல்...

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக இலங்கை பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து கலந்துரையாடல்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போதைய போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்தில்...

புத்தளம் ஆதார வைத்தியசாலை மத்திய அரசாங்கத்தின் கீழ்:

தற்போது வடமேல் மாகாண சபையின் கீழ் இயங்கி வரும் புத்தளம் ஆதார...

ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதியுடன் ஜனாதிபதி அநுர பேச்சு!

ஐக்கிய அரபு அமீரகம் அண்மையில் எதிர்கொண்ட தாக்குதல்கள் குறித்துத் தனது கவலையைத்...