மக்களின் குரலை புரிந்து கொள்ளாவிட்டால் பாராளுமன்றத்தின் நம்பிக்கை பறிபோகும்:இம்தியாஸ் பாக்கீர் மார்க்கர்

Date:

மக்களின் குரலை புரிந்து கொள்ளாவிட்டால் பாராளுமன்றத்தின் நம்பகத்தன்மை இழக்கப்படும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினால் நியமிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மார்க்கர் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் பிரதி சபாநாயகர் தேர்தலின் பின்னர் பாக்கீர் மாக்கார் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது, பிரதி சபாநாயகர் தேர்தலில் எனக்கு வாக்களித்த மற்றும் வாக்களிக்காத அனைவருக்கும் நன்றி தெரிவித்ததுடன் இந்த சபை நம் நாட்டு மக்களின் குரலை பிரதிநிதித்துவப்படுத்தும் மையமாகவும், குறுக்கு வழியாகவும் இருக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த நம்பகத்தன்மையை தக்கவைக்க முடியாவிட்டால் அது கேள்விக்குறிதான். தற்போதைய ஆட்சிக்கு எதிரான கருத்து இருக்கும்போது இந்த வாக்கைப் பயன்படுத்துவது புரிந்துகொள்ள முடியாதது.

பொதுமக்களின் கருத்தை எதிர்கொள்ளும் வகையில் துணிச்சலை வெளிப்படுத்தும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் எனது வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன், என்றார்.

Popular

More like this
Related

விமல் வீரவங்சவின் போராட்டம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின்...

சீன உதவியை விரிவாக்க கோரிக்கை: அமைச்சர் விஜித ஹேரத் சீன வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு.

தென்னாப்பிரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு சீனா திரும்பும் வழியில், இன்று காலை...

மசகு எண்ணெய் (Crude Oil): உலக பொருளாதாரத்தின் நாடித்துடிப்பு

Writer: Eng.S.M.M.Rifai சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இத்தலைப்பு, நமது பாடத்திட்டங்களில்...

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வலுவான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...