‘சுயநல அரசியலை முடிவுக்குகொண்டு வர வேண்டும்’:சிராஜ் மஷூர்

Date:

இன்றைய அரசியல்வாதிகள் பாராளுமன்றத்தை பாதுகாக்கும் இடமாக மாற்றியுள்ளனர். மக்கள் அடிப்படை பிரச்சினைகளை வெளிக்கொணர்தற்காகவே இந்த போராட்டம் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படுகின்றதாக சமூக நீதிக் கட்சியின் பொதுச் செயலாளர் சிராஜ் மஷூர் தெரிவித்தார்.

நேற்றைய தினம் அக்கரைப்பற்று நகரில் நடைபெற்ற ஹர்த்தால் போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டை வங்குரோத்தாக்கி மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சிக்குட்படுத்திய இந்த ராஜபக்ஷ குடும்பத்தை வீட்டுக்கு அனுப்பவேண்டும்.

அவர்களை நீதிக்கு முன்னே நிறுத்த வேண்டும். இந்த நாட்டின் உண்மையான மக்கள் அபிலாஷைகளை வென்றெடுக்கத்தான் தமிழ், முஸ்லிம், சிங்களம் என அனைத்து இன மக்களும் இங்கு ஒன்று திரண்டுக்கின்றது.

மேலும் அழகிய வளங்களைக் கொண்டுள்ள இந்நாட்டை இன்று மோசமாக நிலைமைக்கு தள்ளிய கள்வர் கூட்டத்தை மீண்டும் மீண்டும் தெரிவு செய்யாமல் நேர்மையான அரசியல் தவைர்களை தெரிவு செய்ய வேண்டும்.

அதேவேளை சுயநல அரசியலையும் கோழைத்தனமான அரசியலையும் முடிவுக்குகொண்டு வர அனைவரும் இணைந்து போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்போம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...

இளைஞர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு!

INSIGHT நிறுவனத்தின் புத்தளம் வளாகம் ஏற்பாடு செய்துள்ள 'இளைஞர்களை தொழில்முனைவராக்கும்  பயணம்...