கடந்த ஒரு மாத காலமாக அமைதியான முறையில் நடைபெற்றுக்கொண்டிருந்த ஆர்ப்பாட்டமானது கலவர பூமியாக மாறியது. காலிமுகத்திடலில் தற்போது இடம்பெற்றுவரும் மோதல் சம்பவமானது உச்சநிலையை எட்டியுள்ளது.
அரசுக்கு ஆதரவானவர்கள் தற்போது காலிமுகத்திடல் பகுதிக்குள் பிரவேசித்து அங்கு அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டு வருவதை அவதானிக்க முடிகின்றது
அமைதியான முறையில் காலிமுகத்திடலில் போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் மீது இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
அதுமட்டுமல்லாமல் அங்கு அமைக்கப்பட்டிருந்த கூடாரங்கள் அனைத்தும் ஆர்ப்பாட்டக்காரர்களால் எரிக்கப்பட்டும் வருகின்றது.
இந்நிலையில், கலவரத்தில் ஈடுபட்டு வரும் மக்களை கலைக்க கண்ணீர் புகை மற்றும் நீர்த் தாரை பிரயோகத்தை பொலிஸார் மேற்கொண்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
அனுர குமார அவர்கள் தாற்றபொழுது மோதல் காலத்துக்கு நேரடியாக விஜயம் செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
சஜித் பிரேமதாச மற்றும் எரான் விக்ரமசின்ஹ அவர்களும் நேரடியாக மோதல் காலத்துக்கு விஜயம் செய்தபொது அவர்கள் அடித்து துரத்தப்பட்டார்கள். அதனைத்தொடர்ந்து அவர்களை பாதுகாப்புப்படையினர் பாதுகாப்பாக வாகனங்களில் ஏற்றி அனுப்பி வைத்தார்கள்.
இதனைத்தொடர்ந்து 17 நபர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இதற்கமைய கொழும்பு வடக்கு, கொழும்பு தேற்கு, கொழும்பு மத்திய பிரதேசங்களில் பொலிஸ் ஊரடங்குச்சட்டம் மறு அறிவித்தல் வரை அமுல்படுத்தப்பட்டுள்ளது.
மேலதிகமாக பார்வையிட
FACEBOOK LIVE 🔴 https://www.facebook.com/NewsNowGlobal/videos/1150855882434137