ஆசிரியர் ஒருவர் வயல் வெளியில் இருந்து சடலமாக மீட்பு: மண்டூரில் சம்பவம்!

Date:

வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மண்டூர் பிரதேசத்தில் உள்ள வயல் பிரதேசத்தில் இருந்து ஆசிரியர் ஒருவர் நேற்று மாலை (10) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மண்டூர் பிரதேசத்தைச்சேர்நத (48) வயதுடைய பூபாலபிள்ளை சசிகரன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டவராவார்.
சம்பவ தினமான நேற்று பாடசாலை விடுமுறை என்பதால் தனது மதிய போசண உணவினை உண்டு விட்டு தனது வயலினை பார்வையிடுவதற்காக சென்றவர் நேரமாகியும் வீடு திரும்பாத நிலையில் அவரின் வயல் பிரதேசத்தில் மரணமடைந்த நிலையில் காணப்பட்டதனை அவதானித்த நபர் ஒருவர் அவரின் வீட்டாருக்கு சம்பவத்தை தெரிவித்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
களுவாஞ்சிகுடி நீதிமன்ற நீதிவான் அவர்களின் உத்தரவிற்கமைவாக சம்பவ இடத்திற்குச் சென்ற மண்டூர் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை-தவக்குமார் சடலத்தை பார்வையிட்டதுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்ல உத்தரவிட்டுள்ளார்.மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Popular

More like this
Related

இலங்கை வந்தடைந்த இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட 5 இலங்கையர்கள்

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய...

‘கத்தார் ஹமாஸை மீண்டும் கொண்டு வரும்’: சவூதி அரேபியா எச்சரிக்கை.

இஸ்ரேலிய ஊடகமான "இஸ்ரேல் ஹயோம்' வெளியிட்ட செய்தி., சவூதி அரேபியா, ஐக்கிய அரபு...

பிரதமர் ஹரிணி நாளை இந்தியா விஜயம்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நாளை இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள...

சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்த பல திட்டங்கள்

எதிர்வரும் சுற்றுலாப் பருவத்தை இலக்காகக் கொண்டு சுற்றுலாப் பயணிகளின் வசதிகளை மேம்படுத்த...