திருகோணமலை கடற்படை தளத்தில் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினர் தஞ்சமடைந்துள்ளதாக தெரிவித்து ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினர் பாதுகாக்க வேண்டாம் என்பதுடன் அவர்களை தம்மிடம் ஒப்படைக்குமாறு வலியுறுத்தி பொது மக்கள் நேற்று காலை முதல் மாலை வரை அர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
எனினும், அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்பட்டுள்ள கடுமையான ஊரடங்கு சட்டம் காரணமாக மக்கள் ஆர்ப்பாட்டங்களை கைவிட்டு தத்தமது வீடுகளுக்குள் முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது திருகோணமலை நகர் பொது மக்கள் நடமாட்டம் இல்லாது வெறிச்சோடிக் காணப்படுவதுடன் குறித்த கடற்படைத்தளத்திற்கு பிரவேசிகக் கூடிய வீதிகள் அனைத்திலும்வீதித் தடைகள் ஏற்படுத்தப்பட்டு இராணுவத்தினரது பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளன.