நாடளாவிய ரீதியில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம் காரணமாக காலி முகத்திடலில் இருந்து வெளியேறுமாறு ‘கோட்டா கோ கம’ போராட்டக்காரர்களை கோரி பொலிஸார் அறிவித்துள்ளனர்.
ஜனாதிபதி செயலகத்தில் இருந்து ஒலிபெருக்கி மூலம் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
பொது பாதுகாப்பு சட்டத்தின் 2வது பிரிவின் கீழ், மே 6 முதல் நாடளாவிய ரீதியில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன், மே 9 ஆம் திகதி முதல் நாளை காலை 7 மணி வரை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
எனவே, அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியால் வழங்கப்பட்ட எழுத்துப்பூர்வ அனுமதியின் அதிகாரத்தின் கீழ் தவிர, அந்த பகுதிகளில் உள்ள பொதுசாலை, ரயில் பாதை, பொது பூங்கா, பொது விளையாட்டு மைதானம் அல்லது கடற்கரையில் யாரும் தங்குவதற்கு அனுமதி இல்லை.
எனவே, ஊரடங்கு உத்தரவை மீறி செயல்படுவது தற்போதுள்ள சட்டத்தின்படி குற்றமாகும் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.
எனினும் கோட்டா கோ கம போராட்டக் காரர்கள் தாம் கலைந்து செல்லப் போவதில்லை என்றும், நாளை காலை ஏழு மணியுடன் ஊரடங்கு தளர்த்தப்படும் எனவே தாம் இங்கு அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கூடாரங்களில் அமைதியான முறையில் போராட்டத்தை முன்னெடுப்பதாக தீர்மானித்துள்ளனர்.