சற்று முன்னர் முன்னாள் பிரதமர் ரணில் ஜனாதிபதியை சந்தித்து பேச்சு!

Date:

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தற்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் சந்திப்பில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்திப்பில் இருவரின் விவாதத்தின் உள்ளடக்கம் தெரியவில்லை என முன்னாள் பிரதமர் ரணில் விக்கரமசிங்கவின் உதவியாளர் தெரிவித்துள்ளதுடன் ‘இது பாராளுமன்றம் மற்றும் சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஜனநாயகம் பற்றியது’ கலந்துரையாடலாக இருக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையில் ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதற்கு ஒரு மணித்தியாலத்திற்கு முன்னதாகவே இந்த சந்திப்பு இடம்பெற்று வருகின்றது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அழைப்பின் பேரில் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற இந்த சந்திப்பில் கலந்து கொண்டார்.

ஜனாதிபதிக்கும் முன்னாள் பிரதமருக்கும் இடையில் சுமார் மூன்று மணித்தியாலங்கள் கலந்துரையாடல் இடம்பெற்றதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த கலந்துரையாடலில் ஜனாதிபதி மற்றும் முன்னாள் பிரதமர் மாத்திரமே கலந்து கொண்டுள்ளனர்.

விக்ரமசிங்கவுக்கு ஜனாதிபதி ராஜபக்ஷ பிரதமர் பதவியை வழங்குவார் என ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. எனினும் விக்கிரமசிங்க அதனை ஏற்றுக்கொள்வாரா என்பது இன்னும் தெரியவில்லை.

Popular

More like this
Related

இஸ்ரேலில் உணவகம் (Restaurant) மற்றும் கட்டிடப் புனரமைப்பு (Renovation) ஆகிய துறைகளுக்கான...

பாகிஸ்தான், சவூதி அரேபியா மற்றும் துருக்கி இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

வளைகுடாப் பிராந்தியத்தில் போர்ச் சூழலும் பதற்றமும் அதிகரித்து வரும் நிலையில், பாகிஸ்தான்,...

22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு: நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதில் மாற்றம்!

மேல்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையில்...

தொடரும் சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை!

தொடரும் சீரற்ற வானிலை காரணமாக நான்கு மாவட்டங்களுக்குப் மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை...