மகிந்தவுக்கு பலத்த பாதுகாப்பு: திருகோணமலையில் வீதித் தடுப்புகள்!

Date:

திருகோணமலையில் பாதுகாப்பு இரட்டிப்பாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்பத்தினர் திருகோணமலை கடற்படை முகாமில் தங்கியுள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

இதன் கீழ், திருகோணமலை நகரம் முழுவதும் இராணுவம் மற்றும் பொலிஸ் சோதனை சாலைத் தடுப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

பிரதமராக இருந்த மஹிந்த ராஜபக்ஷவும் அவரது குடும்பத்தினரும் திருகோணமலையில் உள்ள கிழக்கு கடற்படை படைப்பிரிவு தலைமையகத்தில் தங்க வைக்கப்பட்டிருப்பதாக தகவல் வந்ததும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அத்தோடு கொழும்பு காலி முகத்திடலில் மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் புகுந்து போராட்டக்காரர்கள் மீதும், கூடாரங்கள் மீதும் தாக்குதல் நடத்தியதால் நாட்டின் பல இடங்களிலும் ஆளுங்கட்சியினரைக் குறிவைத்து தாக்குதல்கள் நடந்தன.

போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டதால் பாதுகாப்பு கருதி மகிந்த திருகோணமலைக்கு வந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து பொலிஸாரும், காவல்துறையும் பாதுகாப்புப் படைகளும் கடற்படைத் தளத்துக்குச் செல்லும் வழியில் தடுப்புகளை அமைத்து சோதனை செய்து வருகின்றனர். அடையாள அட்டைகளைக் காண்பித்த பிறகே கடற்படைத் தளத்துக்கு செல்லமுடியும்.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...