இறக்குமதி செய்யப்படும் பால் மா மற்றும் குழந்தைகளுக்கான பால் மா ஆகியவற்றின் விலைகளை அதிகரிக்க பால் மா நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன.
ஒரு கிலோகிராம் பால் மாவின் விலை 2,545 ரூபாவாகவும், 400 கிராம் பால் மா பாக்கெட் ஒன்றின் விலை 1,020 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய ஒரு கிலோகிராம் பால் மா பொதியின் விலையை 600 ரூபாவினாலும், 400 கிராம் பொதியின் விலை 230 ரூபாவினாலும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, 400 கிராம் குழந்தைகளுக்கான பால் மா பொதி 1000 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.