சீரற்ற காலநிலையால் 2,352 மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்!

Date:

நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் சில நாட்களாக பெய்து வரும் கடும் மழை மற்றும் பலத்த காற்றினால் இரத்தினபுரி மற்றும் களுத்துறை மாவட்டங்களில் 601 குடும்பங்களைச் சேர்ந்த 2,352 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய இவர்களில் 373 குடும்பங்களைச் சேர்ந்த 1,362 பேர் உறவினர் வீடுகளிலும், 7 குடும்பங்களைச் சேர்ந்த 25 பேர் மூன்று முகாம்களிலும் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இந்த மாவட்டங்களில் 82 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.

களு கங்கைப் பள்ளத்தாக்கின் மேல் மற்றும் நடு ஓடை பகுதிகளில் பெய்த கடும் மழை காரணமாக இரத்தினபுரி பிரதேசத்தில் இருந்து சிறு வெள்ள மட்டமாகவும் களுத்துறை மில்லகந்த பிரதேசம் வரை உயர் வெள்ள மட்டமாகவும் உயர்ந்துள்ளது.

இதேவேளை இன்று ஞாயிற்றுக்கிழமை (15) சீரற்ற காலநிலைக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கையை விடுத்துள்ளது.

நிலவும் காலநிலை காரணமாக காங்கேசன்துறையிலிருந்து மன்னார், கொழும்பு, காலி, அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரப் பகுதிகளுக்கு மீனவர்கள் மற்றும் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...