பாராளுமன்றத்தில் இரண்டு ஊடகவியலாளர்களின் கைத்தொலைபேசிகள் ஆளும்கட்சி எம்.பி.க்களால் பறிமுதல்!

Date:

ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் முடிந்த பின்னர் அதனை காணொளிப்படுத்தினர் என்ற குற்றச்சாட்டின்பேரில் இரண்டு ஊடகவியலாளர்களின் கைத்தொலைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பிரகீத் பெரேரா மற்றும் கசுன் சமரவீர ஆகிய ஊடகவியலாளர்களின் தொலைபேசிகளை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக எதிர்கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச இன்று சபாநாயகரிடம் முறையிட்டார்.

நடப்பு பிரதமர் சுதந்திர ஊடகத்துக்கு சார்பானவர் என்ற அடிப்படையிலும் ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்ற அடிப்படையிலும் குறித்த ஊடகவியலாளர்களின் தொலைபேசிகள் மீள வழங்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மேலும், இது ஊடகங்கள் மற்றும் பேச்சுரிமைக்கு எதிரான தாக்குதல் எனவும், அவர்களின் கைத்தொலைபேசிகளை மீள வழங்குவதற்கு சபாநாயகர் தலையிட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதனையடுத்து உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் மனுஷ நாணயக்கார, ஆளும் கட்சியின் சண்டித்தனம் காரணமாகவே நாட்டில் இன்று நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளது என்று நினைவுப்படுத்தினார்.

இன்று (17) காலை பாராளுமன்ற கூட்டம் நடந்தஅறைக்கு அருகில் காணொளிகளை படம்பிடித்துக் கொண்டிருந்த ஊடகவியலாளர்கள் இருவரை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவர் தகாத வார்த்தைகளால் திட்டி அவர்களது கையடக்கத் தொலைபேசிகளைப் பறித்துச் சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஸ்வர்ணவாஹினியின் பாராளுமன்ற ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவர் பிரகீத் பெரேரா மற்றும் சிரச ஊடகத்தின் கசுன் சமரவீர ஆகியோர் இந்த சம்பவத்திற்கு முகங்கொடுத்துள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் ‘எல்லாவற்றையும் செய்தீர்கள்’ எனக் கூறி இரண்டு ஊடகவியலாளர்களையும் தாக்க முற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர்களான இந்திக்க அனுருத்த மற்றும் டி வீரசிங்க ஆகியோர் இரண்டு கைத்தொலைபேசிகளை சபாநாயகரிடம் கையளிப்பதைக் காணமுடிந்தது.

இதேவேளை முன்னாள் அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண,

பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல பணியாளர்கள் அல்லாத உறுப்பினர்கள் பாராளுமன்ற வளாகத்திற்கு வந்து பாராளுமன்றத்தை தொலைபேசியிலிருந்து வீடியோ பதிவு செய்கிறார்கள்.

கமிட்டி அறையில் எங்கள் ஆளுங்கட்சி கூட்டம் நடந்த இடத்துக்கு அவரும் வந்தார். இது எம்.பி.இக்களின் பாதுகாப்பில் உள்ள பிரச்சினை. அந்த குழு யாரென்று உடனடியாக கண்டுபிடிக்கவும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...