பாராளுமன்ற விவாதங்களில் எதையும் சொல்லும் திறன் எம்.பி.க்களுக்கு இருந்தாலும் சபையில் பேசும் போது கவனமாக இருங்கள் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் இன்று (20) பாராளுமன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றிற்கு வரமுடியாத அரசாங்க அதிகாரிகளைப் பற்றி பேசும்போது, நீங்கள் பேசுவதில் கவனமாக இருங்கள்.
சில பாராளுமன்ற உறுப்பினர்களின் பேச்சுக்கள் தொடர்பில் அரசாங்க அதிகாரிகள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர் எனவும் சபாநாயகர் தெரிவித்தார்.