லிட்ரோ சமையல் எரிவாயு விநியோகம் இன்று ஆரம்பமாகவுள்ளது!

Date:

லிட்ரோ சமையல் எரிவாயு விநியோகத்தை இன்று துரிதப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சில தினங்களின் பின்னர் இன்று கொழும்பு மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு எரிவாயு விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேல்மாகாணத்தில் ஏற்கனவே அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே சமையல் எரிவாயு விநியோகிக்ப்பட்டு வந்த நிலையில் தற்போது அனைத்து மக்களுக்கு எரிவாயுவை பெற்றுக்கொள்ள முடியும் என லிட்ரோ தெரிவித்துள்ளது.

நேற்றும் 80,000 எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்க திட்டமிடப்பட்டிருந்த போதிலும், 35,000 மட்டுமே விநியோகிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, லிட்ரோ நிறுவன அதிகாரிகளை இன்று அழைக்குமாறு கோப் குழுவின் தலைவருக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று பாராளுமன்றத்தில் பணிப்புரை விடுத்துள்ளார்.

கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்ட கப்பலில் இருந்து எரிவாயு விநியோகிப்பதற்கான லொறிகள் தாமதமாக வழங்கப்படுவது தொடர்பில் லிட்ரோ நிறுவன அதிகாரிகளிடம் வினவவே இந்த கூட்டம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்தார் முன்னாள் அமைச்சர் விமல்.

கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூர்யவுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச...

சீன வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகை

சீன வெளிவிவகார அமைச்சர் வொன்க் ஈ இலங்கைக்கு ஒரு நாள் விஜயமாக...

புத்தளம் – கொழும்பு வீதியில் கோர விபத்து : மூவர் உயிரிழப்பு!

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் முந்தலம் – நவதன்குளம்  பகுதியில் இன்று...