இலங்கையின் தேசிய மலர் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வழங்க வேண்டும்: கோபா அறிவுறுத்தியுள்ளது!

Date:

இலங்கையின் தேசிய மலர் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு சுற்றாடல் அமைச்சுக்கு பொதுக் கணக்குக் குழு (கோபா) அறிவுறுத்தியுள்ளது.
அதாவது தேசிய கல்வி நிறுவனம், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் பிற தொடர்புடைய நிறுவனங்கள் மற்றும் பத்திரிகை விளம்பரங்கள் மூலம் முறையான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேசிய மலர் தொடர்பில் பாடசாலைகள், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்ட போதிலும், அது உரிய வகையில் இடம்பெறவில்லை என கோபா குழு அவதானித்துள்ளது.
எனவே, 2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம் எடுக்கப்பட்ட அமைச்சரவை தீர்மானத்தின்படி, இலங்கையின் தேசிய மலர் ´அல்லிப்பூ´ என அமைச்சிற்கு கீழ் உள்ள நிறுவனங்கள் மற்றும் பிற அரச நிறுவனங்களுக்கு தெரிவிக்க போதிய விளம்பரம் செய்ய அமைச்சகம் தவறியுள்ளதால், இலங்கையின் தேசிய மலராக இன்றும் ´நீலோற்பலம்´ என பல சந்தர்ப்பங்களில் பயன்படுத்தப்படுவதை கோபா குழு அவதானித்துள்ளது.
பொதுக் கணக்குக் குழுவின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரணவினால் நேற்று (20) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட கோபா குழுவின் ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது அமர்வின் முதலாவது அறிக்கையிலேயே இந்த உண்மைகள் இடம்பெற்றுள்ளன.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...