(File Photo)
கடந்த மே மாதம் 9 ஆம் திகதி காலி முகத்திடல் மைதானத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ குற்றப் புலனாய்வுப் பிரிவில் சற்று முன்னர் ஆஜரானார்.
அலரிமாளிகை மற்றும் காலி முகத்திடலுக்கு வெளியே ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பாக நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட பல பாராளுமன்ற உறுப்பினர்களிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வாக்குமூலம் பதிவு செய்தனர்.
இந்த சம்பவங்கள் தொடர்பில் கைது செய்து ஆஜர்படுத்துமாறு பொலிஸ் மா அதிபருக்கு சட்டமா அதிபர் வழங்கிய பெயர் பட்டியலில் 22 பேரில் முன்னாள் அமைச்சர் பெர்னாண்டோவின் பெயரும் இடம்பெற்றுள்ளது.