தேவையான எரிபொருளை விவசாயிகளுக்கு வழங்கும் வேலைத்திட்டம்: மஹிந்த அமரவீர

Date:

நெற்செய்கை பயிர்செய்ய தேவையான எரிபொருளை விவசாயிகளுக்கு உடனடியாக வழங்குவதற்கான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இதன்படி, நாட்டின் 25 மாவட்டங்களையும் உள்ளடக்கிய தெரிவு செய்யப்பட்ட 217 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் விவசாயிகளுக்கு எரிபொருள் வழங்கப்படும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், இந்த வேலைத்திட்டம் தொடர்பில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர், இம்முறை பயிர்ச்செய்கைக்கு மேலதிக எரிபொருளை வழங்குவதற்கு இணக்கம் காணப்பட்டதாக மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

விவசாய பணிப்பாளர் நாயகம் எரிபொருள் நிரப்பு நிலையங்களின் பட்டியலை விவசாய அமைச்சரிடம் கையளித்ததையடுத்து, அந்த எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக விவசாயிகளுக்கு தேவையான எரிபொருளை தொடர்ந்தும் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

2022 நெல் விதைப்பதற்காக பருவம் ஏற்கனவே ஆரம்பமாகியுள்ளதுடன், நாட்டின் அனைத்து விவசாயப் பகுதிகளிலும் உள்ள விவசாயிகள் அனைவருக்கும் எரிபொருள் கிடைக்காததால் கடும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

கமநல சேவை நிலையங்களின் அனுமதி கடிதத்தை அங்கீகரிக்கப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு சமர்ப்பித்து விவசாயிகள் தமது ஒவ்வொரு நெற்பயிர்களுக்கும் தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...