ஏறக்குறைய ஒரு வாரத்திற்கு விநியோகத்தை இடைநிறுத்திய லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனம், 3,500 மெட்ரிக் டன் எரிவாயுவை கொண்ட கப்பல் இன்று திங்கட்கிழமை மே 30 ஆம் திகதி கொழும்பை வந்தடையும் என்று தெரிவித்துள்ளது.
பொருத்தமான காலநிலை நிலவும் பட்சத்தில் இன்றே சமையல் எரிவாயு சிலிண்டர்களை இறக்கும் பணியை ஆரம்பிக்கும் என லிட்ரோ தெரிவித்துள்ளது.
அப்படியில்லையெனில், எரிவாயு சிலிண்டர்களை இறக்கும் பணி இல்லையெனில் பத்து மணி நேரம் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஜூன் 1 ஆம் திகதிக்குள் சந்தையில் விநியோகம் தொடங்கும் என்று நம்புவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை லாஃப்ஸ் எரிவாயு, ஜூன் 1 ஆம் திகதிக்குள் விநியோகத்தை தொடங்கும் என்று நுகர்வோருக்கு உறுதியளித்துள்ளது.
மேலும் 1500 மெற்றிக் தொன் எரிவாயுவை ஏற்றிக்கொண்டு மற்றுமொரு கப்பல் எதிர்வரும் சனிக்கிழமை இலங்கைக்கு வரவுள்ளது.
இந்த இரண்டு கப்பல்களின் எரிவாயு இருப்புகளும் ஓமன் வர்த்தக நிறுவனத்தினால் இலங்கைக்கு வழங்கப்படுகின்றன.
நிறுவனம் இரண்டு வருட ஒப்பந்தத்தின் கீழ் லிட்ரோ நிறுவனத்திற்கு எரிவாயுவை வழங்கியது. ஆனால் அவர்களுடனான ஒப்பந்தம் கடந்த பெப்ரவரி மாதத்துடன் முடிவடைந்தது.
எவ்வாறாயினும், ஒப்பந்தத்தின் கீழ் இலங்கைக்கு கிடைத்த கடைசி இரண்டு எரிவாயு தாங்கிகளும் ஏப்ரல் கடைசி வாரத்திலும் மே முதல் வாரத்திலும் இலங்கையை வந்தடைந்ததாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இன்று இலங்கைக்கு வரவுள்ள இந்த எரிவாயு கப்பலும், அடுத்த மாதம் 4ம் திகதி இலங்கை கடற்பரப்புக்கு வரவுள்ள கப்பலும் உடன்படிக்கையின்றி எரிவாயு கையிருப்பு பெறவுள்ளன.
எவ்வாறாயினும், நாட்டுக்கு ரும் 02 எரிவாயு கப்பல்களில் உள்ள எரிவாயு கையிருப்பு நாட்டின் தினசரி தேவைக்கு 4 நாட்களுக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும்.
நாட்டில் தற்போது நிலவும் எரிவாயு பற்றாக்குறையை முடிவுக்கு கொண்டு வருவதற்கு தற்போது சுமார் 37,000 மெற்றிக் தொன் எரிவாயு தேவைப்படுகிறது. இதற்காக குறைந்தபட்சம் 10 எரிவாயு கலன்கள் இறக்குமதி செய்யப்பட வேண்டும்.