அவிசாவளை, கொட்டகொடவத்த பிரதேசத்தில் வசிக்கும் 15 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவரும் காணாமல் போயுள்ளார்.
தமது பிள்ளை வீடு திரும்பவில்லை என அவரது பெற்றோர் அவிசாவளை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் அவிசாவளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த மாணவன் கடந்த (28) முதல் காணாமல் போயுள்ளதாக அவிசாவளை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து பெற்றோர் நேற்று (29) இரவு பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். இவர் முன்பு வீட்டை விட்டு வெளியேறி நண்பர் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்து சில நாட்கள் கழித்து திரும்பினார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கல்முனையில் 16 வயதுடைய சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளான சிறுமி, நீதிமன்ற உத்தரவின் பேரில் பாதுகாப்பு பாடசாலையில் இருந்து காணாமல் போனதாக புகாராளிக்கப்பட்டுள்ளது.