தற்போது பயன்பாட்டில் இல்லாத அரச காணிகளை தற்காலிகமாக பயிர்ச்செய்கைக்காக மட்டும் பொதுமக்களுக்கு விடுவிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சின் செயலாளர் ரோஹண புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
தற்போது பயன்பாட்டில் இல்லாத அரச காணிகளை தற்காலிகமாக பயிர்ச்செய்கைக்காக மட்டும் பொதுமக்களுக்கு விடுவிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய உணவு நெருக்கடிக்கு தீர்வாக நாடளாவிய ரீதியில் பயிர்ச்செய்கை முன்னெடுக்கப்படும் எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
சாத்தியமான உணவு நெருக்கடிக்கு மக்களாகிய நாம் எடுக்கக் கூடிய தீர்வு, உணவு நெருக்கடிக்கு மக்கள் தயாராக வேண்டும், அதற்கமைய இந்த வேலைத் திட்டத்தில் வீட்டுக்கு முன்பாக சிறு சிறு பயிர்செய்கைகளை எம்மால் முடிந்தளவு முன்னெடுக்கலாம்.
அதேபோல மரவள்ளிக்கிழங்கு, மிளகாய், வெண்டிக்காய், புடலங்காய், உள்ளிட்ட சிறு சிறு மரக்கறி உற்பத்திகளை செய்துகொள்ளலாம், இதற்கு உரங்கள் அத்தியவசியமில்லை, இவ்வாறு செய்வதன் மூலம் தமக்கு தேவையான உணவுகளை நாமே பெற்றுக்கொள்ளலாம்.
உணவுப்பற்றாக்குறையை இல்லாமலாக்குவதற்கு இவ்வாறு வீட்டுத்தோட்டங்களை செய்வதற்கு முன்வரவேண்டும் இதற்காக அரசுக்கு சொந்தமான நிலங்களை பயன்படுத்த விரைவில் அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.