இந்தியாவிடமிருந்து மனிதாபிமான நிவாரண உதவிகளை வழங்கியதன் மூலம் தாம் தாக்கம் செலுத்தியதாக வெளியான செய்திகள் உண்மைக்குப் புறம்பானது என நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன்தொண்டமான் தெரிவித்துள்ளார்.
‘இது முற்றிலும் தவறானது என்றும், கிராம சேவகர் சங்கத்திற்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்படும் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதற்கமைய அவர்கள் ஆதாரம் அல்லது பதிலளிக்கத் தவறினால், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று ஜீவன் தொண்டமான் நேற்றையதினம் தனது டுவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் ‘தமிழக அரசு வழங்கிய அத்தியாவசியப் பொருட்களின் பயனாளிகள் பட்டியலில் நான் முறைகேடு செய்ய முயற்சிப்பதாக செய்திகள் பரவி வருகின்றன.
தோட்டத் தொழிலாளர்களுக்கு மட்டுமின்றி அத்தியாவசியமான அனைவருக்கும் வழங்குவது குறித்து பரிசீலிக்குமாறு கோரி கடந்த 28ஆம் கடிதம் அனுப்பப்பட்டது,’ என்றார்.
தமிழக அரசு வழங்கும் அத்தியாவசியப் பொருட்களுக்கான பயனாளிகள் பட்டியலை நான் கையாடல் செய்ய முயற்சிப்பதாக ஒரு செய்தி முற்றிலும் பொய்யானது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை தமிழகம் இலங்கைக்கு வழங்கிய உதவிகளை வழங்குவதில் ஜீவன் தலையிட்டதாக கிராம சேவகர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது,