இலங்கைக்கான அமெரிக்க தூதுவருக்கும் வெளிவிவகார அமைச்சின் செயலாளருக்குமிடையில் சந்திப்பு!

Date:

வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன மற்றும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலி சங் ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பு தொடர்பில் ஜுலி சங் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

குறித்த டுவிட்டர் பதிவில் ,

இலங்கையின் ஜனநாயக மற்றும் வளமான எதிர்காலத்தை பாதுகாக்குமாறு இலங்கை மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இதற்காக அமெரிக்கா எவ்வாறு இலங்கைக்கு உதவ முடியும் என்பது தொடர்பில் குறித்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டது என அவர் தனது பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி, இலங்கையில் முதலீட்டை அதிகரித்தல் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய நிர்வாகத்தை ஆதரிக்கும் தங்கள் உறுதிப்பாடு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டன என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Popular

More like this
Related

இலஞ்சம் வாங்கிய முன்னாள் சீன அமைச்சருக்கு மரணதண்டனை

சீனாவில் ஜி ஜின்பிங் தலைமையிலான அரசு கடந்த சில காலமாகவே லஞ்சம்...

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

டெங்கு நோயாளர்கள் பதிவாகும் வீதம் நாட்டில் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப்...

சோளம் கிடைக்காததால் திரிபோஷா உற்பத்தி இடைநிறுத்தம்!

இலங்கையில் திரிபோஷா உற்பத்தி கடந்த செப்டெம்பர் 21 ஆம் திகதி முதல்...

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கைது!

யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 22...