இந்தியாவில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்படும் என அல்கொய்தா அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மா மற்றும் நவீன் குமார் ஜிண்டால் ஆகியோர் இறைத் தூதர் நபிகள் நாயகத்தை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.
இந்த விவகாரம் பூதாகாரமானதை தொடந்து நுபுர் சர்மாவை கட்சியில் இருந்து இடைநிறுத்தி பா.ஜ.க உத்தரவிட்டது.
எனினும் மத்திய பா.ஜ.க அரசு மீது பல்வேறு இஸ்லாமிய நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், நபிகள் நாயகத்தை குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததற்காக இந்தியா மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவோம் என்று அல்கொய்தா பயங்கரவாத அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக 6ஆம் திகதி பதிவிடப்பட்ட கடிதத்தில்,
நபிகளின் கண்ணியத்தை காப்பதற்காக டெல்லி, மும்பை, உத்தரப் பிரதேசம், குஜராத் ஆகிய பகுதிகளில் நாங்கள் தற்கொலைப்படை தாக்குதல்களை நடத்துவோம்.
டெல்லி, மும்பை, உத்தரபிரதேசம், குஜராத்தை சேர்ந்த இந்துத்துவ பயங்கரவாதிகள் தங்கள் முடிவுக்காக காத்திருக்க வேண்டும்’ என அந்த கடித்ததில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சில நாட்களுக்கு முன்பு, இந்துத்துவாவின் பிரச்சாரகர்களும் கொடி ஏந்தியவர்களும் தொலைக்காட்சி விவாதத்தில் இஸ்லாம் குறித்தும் நபிகள் குறித்தும் அவதூராக பேசினர். இந்த அவமானத்திற்கு பதிலளிக்கும் விதமாக, உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்களின் மனம் பலிவாக்கும் உணர்வால் நிரம்பியுள்ளது.
நமது உடலிலும், நம் குழந்தைகளின் உடலிலும் வெடிகுண்டுகளை கட்டிக்கொண்டு, நமது நபியை இழிவுபடுத்தோர் அனைவரையும் கொல்ல வேண்டும்.
டெல்லி, மும்பை, உத்தரபிரதேசம், குஜராத்தை சேர்ந்த காவி பயங்கரவாதிகள் தங்கள் முடிவுக்காக காத்திருக்க வேண்டும்’ என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து இந்த இடங்களில் மத்திய புலனாய்வு அமைப்பு பாதுகாப்பை தீவிப்படுத்தியுள்ளது. இந்த அறிக்கையின் பின்னணி குறித்து உளவுத்துறை விசாரணை நடத்தி வருவதுடன் இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.