சுமார் 5,800 பேர் அடுத்த ஆறு மாதங்களுக்குள் தென் கொரியாவுக்கு வேலைக்காக அனுப்பப்படுவார்கள் என்று இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
வெளிவிவகார அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் பணிப்புரையின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
119 பேர் கொண்ட முதல் குழு நேற்றிரவு தென் கொரியாவுக்கு புறப்பட்டுச் சென்றதாக பணியகம் தெரிவித்துள்ளது.
புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அதிக அங்கீகாரம் வழங்கும் முறைமை எதிர்காலத்தில் உருவாக்கப்படும் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.