வீதியில் பேரணியாகச் செல்லுங்கள், பலகையைப் பிடியுங்கள்,, அது ஒரு பிரச்சனையல்ல, ஆனால் நாட்டை இருட்டில் விட்டு செல்ல வேண்டாம் என தொழிற்சங்கங்களுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இன்று (8) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது, நாட்டை இருளில் மூழ்கடித்தால், இந்தியாவிடம் எண்ணெய் கேட்க வேண்டாம் என்று பிரதமர் கூறினார்.
நாட்டை இருளில் மூழ்கடித்தால் எண்ணெய் கொடுப்பதற்கு இந்தியா பொறுப்பேற்க முடியாது என தெரிவித்த பிரதமர் இலங்கைக்கு எண்ணெய் வழங்குவதை இந்தியாவில் உள்ள சிலர் எதிர்ப்பதாகவும் தெரிவித்தார்.
சர்வதேச நாடுகள் எப்பொழுதும் கூறுவது, ‘நீங்கள் உங்களுக்குள் உதவுங்கள், அப்போது நாங்கள் உதவுவோம்’ என, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.