(File Photo)
பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு 173 கைதிகள் விடுதலை செய்ய எதிர்பார்க்கப்படுவதாக நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷவின் பரிந்துரையின் பேரில் குறித்த கைதிகள் விசேட பொதுமன்னிப்பின் கீழ் விடுவிக்கப்படவுள்ளனர்.
இதன்படி, 141 கைதிகளின் அபராதத் தொகை ரத்து செய்யப்பட்டதன் காரணமாகவும் மேலும் 32 கைதிகள் பதினான்கு நாட்கள் குறைக்கப்பட்டதன் காரணமாகவும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து அதிகளவான 23 கைதிகளும் குருவிட்ட, மஹர, நீர்கொழும்பு, வீரவில, வாரியபொல, போகம்பர, அனுராதபுரம், களுத்துறை, கொழும்பு மஹசின் சிறைச்சாலை, தல்தெனை, வடரெக, பதுளை, மாத்தறை மற்றும் அங்குனகொலபெலஸ்ஸ ஆகிய சிறைகளில் இருந்தும் விடுவிக்கப்படவுள்ளனர்.
இதேவேளை, பொலன்னறுவை, கேகாலை, மட்டக்களப்பு, மொனராகலை, பல்லன்சேனை, வவுனியா, யாழ்ப்பாணம், காலி, பல்லேகல மற்றும் திருகோணமலை சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளும் விடுவிக்கப்படவுள்ளனர்.