அடுத்த வாரம் முதல் வெள்ளிக்கிழமைகளில் அரச உத்தியோகத்தர்கள் வீட்டில் இருந்தே தமது கடமைகளை மேற்கொள்ள எதிர்பார்க்கப்படுவதாக பொது நிர்வாக அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
நாளை பொது விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்படுவதற்கான காரணங்கள் தொடர்பிலும் அமைச்சர் இதன்போது கருத்து வெளியிட்டார்.
அடுத்த வாரத்தில் இந்து இதனை நடைமுறைப்படுத்த கலந்துரையாடல்கள் நட்தப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் வீடுகளில் அவர்கள் உபயோகமுள்ள முறையில் பயிர்செய்கையை மேற்கொள்ளும் வகையிலேயே இந்த விடுமுறையை வழங்க எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் நாளை திங்கட்கிழமை அமைச்சரவைக் கூட்டத்தில் இறுதி தீர்மானம் எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விவசாயிகள் எதிர்நோக்கும் உரப் பிரச்சினை தொடர்பாகவும் அமைச்சர் கருத்து தெரிவிக்கையில், உரப்பிரச்சினை இன்று நாட்டில் நிலவுகின்றது.
எனினும் அதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.