எரிவாயுக்காக மருத்துவர்கள் வரிசையில் காத்திருப்பதால் கடமைகள் கடுமையாகப் பாதிப்பு!

Date:

நாடு முழுவதும் உள்ள மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் பொறியாளர்கள் உட்பட ஆயிரக்கணக்கான தொழில் வல்லுநர்கள் மணிக்கணக்கில் வரிசையில் கத்திருப்பதால் அவர்களது கடமைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.

எரிபொருள் வரிசையில் நிற்கும் பெரும்பாலான மக்கள் மருத்துவர்கள் உட்பட மருத்துவ வல்லுநர்களாகும்.

இதேநேரம், பொரளையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மூன்று மணித்தியாலங்களுக்கு மேல் செலவிட்டதாகவும், கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தை வைத்தியர் டாக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

மேலும், மஹரகம நம்பிக்கை வைத்தியசாலையின் விசேட வைத்தியரான தனது மனைவியும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக வரிசையில் இருந்து வெளியேறியதாக அவர் தெரிவித்தார்.

ஒரு மருத்துவ நிபுணரான அவர், எரிபொருளைப் பெறுவதில் தனக்கு வழங்கப்பட்ட முன்னுரிமை குறித்து திருப்தி அடைய முடியாது என்று நிபுணர் மேலும் கூறினார்.

வைத்தியர்கள் உட்பட பல வைத்திய நிபுணர்கள் வரிசையில் நிற்பதால் வைத்தியசாலையின் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக பல வைத்தியசாலை பணிப்பாளர்கள் சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்துள்ளனர்.

மோசமான எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பெட்ரோல் நிலையங்களில் வரிசைகள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு விரிவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...