வைத்தியசாலையில், பிரசவத்திற்குப் பிறகு தாயொருவருக்கு இரத்தப்போக்கில் அனுமதிக்கப்பட்டிருந்ததையடுத்து பிரதான மருத்துவர் ஒருவர் எரிபொருள் வரிசையில் காத்துக்கொண்டிருந்த சம்பவம் ஒன்று பதிவாகியது.
குறித்த வைத்தியரால் ஒரு முச்சக்கர வண்டியொன்றை நிறுத்திக்கொள்ள முடியாமல் இருந்தது.
இதனையடுத்து மருத்துவமனைக்குசெல்லவும் வாகனத்தைக் கண்டுபிடிக்கவும் பொலிஸார் முயற்சி செய்தனர்.
இந்தசம்பவம் தொடர்பில் டுவிட்டர் பக்கத்தில் ‘இது நுகேகொடையில் பதிவாகிய சம்பவம் கிராமப்புறங்களில் இல்லை, ‘என்று ஒரு மருத்துவர் ட்வீட் செய்துள்ளார்.
மக்கள் நெருக்கடியில் இருப்பதால் எரிபொருள் வரிசையில் இலங்கையில் நிலைமை தீவிரமடைந்துள்ளது.
இதேவேளை இன்று (20) எரிபொருள் வரிசைகளில் காணப்படும் வாகனங்களின் எண்ணிக்கையில் சிறிதளவு குறைவடைந்துள்ளதை அவதானிக்க முடிந்தது.
மேலும் நாடு முழுவதும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பல சம்பவங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முல்லைத்தீவு மற்றும் களுத்துறை ஆகிய இடங்களில் இலங்கை இராணுவம் தலையிட்டு நிலைமையைக் கட்டுப்படுத்த வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்திய இரண்டு சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
யாழ்.மாவட்டத்தில் உள்ள நெல்லியடி எரிபொருள் நிரப்பு நிலையத்திலிருந்து பெற்றோலை பெற்றுக்கொள்வதற்காக நேற்று முதல் மக்கள் நீண்ட வரிசையில் வாகனங்களுடன் காத்திருந்தனர்.
இதேவேளை, இன்று எரிபொருள் நிலையத்தில் டீசல் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. டீசலை நிரப்ப மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததை அவதானிக்க முடிந்தது.