பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் திருகோணமலையில் பூப்பந்து போட்டி!

Date:

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம், திருகோணமலை மாவட்ட பூப்பந்தாட்ட சங்கத்துடன் இணைந்து 2022 ஜூன் 18 முதல் 19 வரை பூப்பந்து போட்டியை ஏற்பாடு செய்துள்ளது.

இந்தப்போட்டிகள் திருகோணமலை ‘மெக் ஹெய்சர்’ (Mc Heyzer) ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது.

போட்டியில் கலந்து கொண்ட பல்வேறு வயதுடைய மாணவர்கள் தங்களுடைய தனிப்பட்ட திறமைகளை வெளிக்கொணர சிறந்த வாய்ப்பாக அமைந்தது.

மேலும் இந்த பரிசளிப்பு விழாவில் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்களை வழங்கி வைத்தார்.

அத்தோடு பாகிஸ்தான் துணை உயர்ஸ்தானிகர் தன்வீர் அஹமட் உரையாற்றினார்.

இதன்போது, போட்டியை ஏற்பாடு செய்த மாண்புமிகு ஆளுநர் மற்றும் திருகோணமலை மாவட்ட பூப்பந்தாட்ட சங்கத்திற்கு நன்றி தெரிவித்தார்.

பாகிஸ்தானும் இலங்கையும் வலுவான நட்புறவைப் பகிர்ந்துகொள்வதுடன் விளையாட்டு மீதான அன்பையும் இலங்கையர்கள் மற்றும் பாகிஸ்தானியர்களின் இதயங்களில் இணைத்துக்கொள்வதாக அவர் கூறினார்.

மேலும் பாகிஸ்தானைப் போலவே இலங்கையும் விளையாட்டை விரும்பும் நாடு என்றும்,  இளைஞர்களின் விளையாட்டு மீதான ஆர்வத்தை உயிர்ப்புடன் வைத்திருப்பதில் இலங்கை பாடசாலை முறைமை மிகவும் தீவிரமாக உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இந்த போட்டியானது ஏற்கனவே இருக்கும் நமது மக்களுடன் சிறந்த உறவை மேலும் மேம்படுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை: மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்தல்.

நாட்டின் இரண்டு பகுதிகளின் மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்து மண்சரிவு சிவப்பு...

நாட்டில் வேலையின்றி இருக்கும் 365,951 பேர்: பிரதமர் தகவல்!

நாட்டில் தற்சமயம் 365,951 பேர் வேலையின்றி இருப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய...

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...