நெருங்கிய நண்பர் என்ற வகையில் ஏற்பட்டுள்ள இலங்கையின் இக்கட்டான சூழ்நிலையை முறியடிப்பதற்கு இந்திய அரசாங்கம் தனது பூரண ஆதரவை இலங்கைக்கு வழங்கும் என இந்திய வெளிவிவகார செயலாளர் வினய் குவத்ரா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று (23) முற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை இந்தய உயர்மட்டக்குழு சந்தித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்திய கடன் உதவியின் கீழ் எரிபொருள், மருந்து, உரம் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை இலங்கை ஏற்கனவே பெற்றுள்ளது.
இலங்கைக்கு தொடர்ந்தும் ஆதரவளிக்க இந்திய அரசாங்கமும் அரசியல் அதிகாரிகளும் அர்ப்பணிப்புடன் இருப்பதாக தூதுக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை கடினமான காலங்களில் இலங்கைக்கு உதவுவதில் இந்திய அரசாங்கம் கணிசமான பங்கை வகிக்கிறது. அதற்காக இந்திய அரசாங்கம் மற்றும் இலங்கை மக்கள் வழங்கிய பாராட்டுக்கும் நன்றிக்கும் ஜனாதிபதி நன்றி தெரிவித்தார்.
இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தவும், புத்துயிர் பெறவும் இந்திய உதவித் திட்டத்தின் எதிர்கால நடவடிக்கை குறித்து இரு தரப்பினரும் விரிவாக விவாதித்தனர்.
இக்கட்டான காலகட்டத்திற்குப் பிறகு நாடு விரைவில் மீண்டு வரும் என்றும் தூதுக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்தனர்.
இதனிடையே இந்திய வெளிவிவகார செயலாளர் வினய் குவாட்ரோ உள்ளிட்ட இந்திய தூதுக்குழுவினர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளனர்.
தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் இந்தியா மற்றும் இலங்கையின் இருதரப்பு உதவிகள் குறித்து கலந்துரையாடுவதற்காக அவர்கள் இலங்கை வந்தடைந்தனர்.
இந்த விஜயத்தின் போது இந்திய பிரதிநிதிகள் இலங்கை ஜனாதிபதியை சந்திக்க உள்ளனர். நாட்டின் பொருளாதார நிலை மற்றும் குறுகிய கால மற்றும் நீண்ட கால ஆதரவு குறித்தும் அவர்கள் விவாதிப்பார்கள்.