அனைவரும் ஆதரவளித்தால் நாட்டை சாதகமான பாதையில் கொண்டு செல்லலாம்: வஜிர

Date:

நாட்டின் அபிவிருத்திக்கு அனைவரும் ஆதரவளித்தால் எதிர்வரும் நவம்பர் மாதத்திற்குள் நாட்டை சாதகமான பாதையில் கொண்டு செல்ல முடியும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,

தற்போது 20 மில்லியன் மக்கள் நோய்வாய்ப்பட்டிருப்பதாகவும், அந்த நோயாளர்களை கவனிக்க வந்தவர்தான் நிபுணத்துவ மருத்துவர் பிரதமர்.

ரணில் விக்கிரமசிங்கவை சபிக்காமல் அனைவரின் ஆசியும் கிடைத்தால்! இலங்கையை மீண்டும் கட்டியெழுப்ப முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், 2019ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்காக ஐக்கிய தேசியக் கட்சி முன்வைத்த கொள்கைப் பிரகடனம் இன்றும் பூரண உண்மையாக மாறியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேநேரம், ஐக்கிய தேசியக் கட்சி முன்வைக்கும் கொள்கைப் பிரகடனத்தை மக்கள் செவிமடுத்திருந்தால் இன்று நாடு இவ்வாறான அவலத்தை எதிர்நோக்கியிருக்காது என அவர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...